Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

       செந்துறை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  .இது குறித்து, செந்துறை வட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள ஆதனங்குறிச்சி,மணக்குடையான்,பெரியாக்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்கலில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றிற்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆதனங்குறிச்சி கிராமத்துக்கு அருகில் வசிக்கும் தளவாய், மணக்குடையான், ஆலத்தியூர், துளார், ஆதனங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விதவைகள் விண்ணப்பிக்கலாம்.
மணக்குடையான் கிராமத்துக்கு ஆதனங்குறிச்சி, துளார்,தளவாய், அசாவீரன்குடிக்காடு, மற்றும் மணக்குடையான் கிராமங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பெரியாக்குறிச்சி கிராமத்துக்கு மணப்புத்தூர், அசாவீரன்குடிக்காடு, சிறுகளத்தூர், மருவத்தூர், நக்கம்பாடி மற்றும் பெரியாக்குறிச்சியை சேர்ந்த பொது வகுப்பினரும், அட்டவணை வகுப்பினரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குள்பட்டவராகவும்  இருக்க வேண்டும். அட்டவணை வகுப்பினர் 35 வயதுக்குள்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள்பட்டவராகவுமம் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பெயர் முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன் ரூ.30 க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏப்.6 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive