Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 84.68 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு: இளம் தலைமுறைக்கு அரசு பணி மீது ஆர்வம் குறையுது

          வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து, தமிழகத்தில், 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். பதிவை புதுப்பிக்காததால், ஆறு மாதங்களில், பதிவு செய்தோர் எண்ணிக்கை, 10 லட்சம் வரை குறைந்துள்ளது. 
 
          தனியார் நிறுவனங்கள் சிவப்பு கம்பளம் விரிப்பதால், இளைய தலைமுறைக்கு அரசுப்பணி மீதான ஆர்வம் குறைந்ததே காரணம் என, கூறப்படுகிறது.தமிழகத்தில், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து, 2015 டிச., 31 வரை, வேலைக்கு காத்திருப்போர் பற்றிய விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. மொத்தம், 84.68 லட்சம் பேர் பட்டியலில் உள்ளனர். 


தமிழகத்தில், 2014 ஜூன் வரை, 48.32 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம், 94.58 லட்சம் பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தற்போது, 10 லட்சம் (9.90 லட்சம்) குறைந்துள்ளது. இதனால், அவ்வளவு பேருக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.


இதுகுறித்து, வேலைவாய்ப்பு இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, மே, ஜூன் மாதங்களில் தான் பதிவு செய்வார்கள். அவ்வாறு பதிவு செய்யும்போது, ஜூன் இறுதியில் பதிவு அதிகமாக இருக்கும். இவ்வாறு பதிவு செய்வோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், பதிவு செய்வோர் சில ஆண்டுகளுக்குப் பின், புதுப்பிக்க தவறி விடுகின்றனர். இதனால், எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த, 2013 முதல் 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவற விட்டோர், புதுப்பிக்க, இம்மாதம் 7ம் தேதி வரை சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியோர், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் கிடைப்பது கடினம். ஜன., மாதத்தில், 12,532 பேர் பதிவை புதுப்பித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.




ஆர்வம் இல்லையா?

தனியார் நிறுவனம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதால், நிபுணத்துவம் பெற்றோர், அரசுப் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளுக்கு, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., முடித்த, 1,737 டாக்டர்கள் தேவை. 'நேரில் வந்தால் போதும்; சேர்த்துக் கொள்கிறோம்' என, அரசு சிவப்புக் கம்பளம் விரித்தது. ஆனால், 433 பேர் தான் வந்தனர். இன்னும், 1,300 இடங்களை நிரப்ப டாக்டர்கள் கிடைக்கவில்லை; எப்படி சமாளிப்பது என, அரசு திணறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் வந்து விட்டன. தகுதிக்கேற்ற சம்பளம், சலுகைகள் என, வாரி வழங்குகின்றன. படிக்கும்போதே, 'கேம்பஸ் இன்டர்வியூ' என, நடத்தி, திறன் படைத்தோரை, தனியார் நிறுவனங்கள் கொத்திச் செல்கின்றன. இதனால், அரசுப்பணி மீது, இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. வேலைவாய்ப்பகங்களில் பெயர் அளவில் பதிவு செய்து விட்டு, புதுப்பிக்க தவறி விடுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாற்றுத்திறனாளிகள் 1.10 லட்சம்
இன்ஜினியர்கள் 2 லட்சம்
டாக்டர்கள் 8,301
இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3.91 லட்சம்
முதுநிலை பட்டதாரிகள் 2.72 லட்சம். 
பதிவு செய்தோரில் ஆண்கள் 41.54 லட்சம் 
பெண்கள் 43.14 லட்சம் அதிகமாக உள்ளனர்.
பிரிவு வாரியாக காத்திருப்போர் பிரிவு எண்ணிக்கை பெண்கள்
ஆதிதிராவிடர் 18,35,199 8,99,376
அருந்ததியர் 1,88,501 91,425
பழங்குடியினர் 61,953 28,065 
மிகவும் பிற்படுத்தப் பட்டோர் 21,60,478 10,61,900
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 3,31,761 1,65,259
பிற்படுத்தப்பட்டோர் 35,88,242 19,06,315
இதர பிரிவினர் 3,02,159 1,62,004




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive