சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல்வாதிகள் எதிராக கருத்து தெரிவிப்போர் மீது 66ஏ தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 66-ஏ தெளிவற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறிய நீதிபதிகள் பலமேஸ்வர் மற்றம் நாரிமன் ஆகியோர், இச்சட்டம் செல்லாது என்ற வரலாற்று தீர்ப்பை வழங்கினர்.
மேலும் இச்சட்டம் ஜனநாயகத்தின் இரு தூண்களான சுதந்திரத்தின் வேரையும். கருத்து சுதந்திரத்தையும் அசைத்துவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...