சென்னை:தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்,
605 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 30ம் தேதி
சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர்
மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:தமிழ்நாடு வேளாண் பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர்
பதவிக்கான, 183 காலியிடங்களுக்கு, 2014 மார்ச், 16ல் எழுத்துத் தேர்வு
நடந்தது. இதில்,
659 தேர்வர்கள் பங்கேற்றனர். இதில்,
விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்களின் உண்மைத் தன்மையை
அறியும் பொருட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட உள்ளது.
இதற்கான, 605 விண்ணப்பதாரர்களின் பதிவெண்
பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
வரும், 30ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி துவங்கும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும்.குறிப்பிட்ட
நாளில், உரிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளத் தவறினால், அடுத்த கட்ட
தெரிவு நிலைக்கு,
அந்த விண்ணப்பதாரர் தகுதியை இழந்தவராகிறார்.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில்
இடம் பெற்றுள்ளதால் மட்டுமே, அடுத்த கட்ட நிலைக்கு செல்ல உரிமை உண்டு எனக்
கோர இயலாது. எனவே, தவறாமல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க
வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...