Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

1. பேக்கிங்/சமையல் சோடா:

            சமையல் சோடாவானது, மஞ்சள் நிற‌ பற்களை நீக்கி வெண்மையான பற்களை பெற உதவும் எளிய மற்றும் விரைவான வழியாகும். இது பற்களில் உள்ள தகடை ஒழித்து உங்கள் அழகான பற்களை பளபளப்பாக மாற்றுவதோடு வெண்மையான‌ ஒளியையும் தருகிறது. நீங்கள் இதை எல்லாம் பெறுவதற்கு பற்பசை சிறிதளவு, பேக்கிங் சோடா சில தேக்கரண்டி இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். 
 
         இதை நீங்கள் உங்கள் பிரஷ்ஷில் வைத்து பல் துலக்கவும். வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை கொப்பளிக்கவும்.இந்த முறையை வாரத்திற்கு இரண்டு தடவை செய்ய‌ நீங்களே ஒரு சிறந்த மாற்றாத்தை கண்கூடாக காண்பீர்கள்.


இது உங்களுக்கு சரியாக வேலை செய்யவில்லை என்றால், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா சேர்த்து பல் துலக்கவும். இதுவே உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

வார‌ம் மூன்றுமுறை, ஒரு இரண்டு நிமிடங்கள் சமையல் சோடாவை உங்கள் பற்களுக்கு தேய்த்து உபயோகிப்பதால் ஏற்படும் வியக்கத்தக்க மாற்ற‌த்தை கண்கூடாக காண்பீர்கள்.

2. ஆரஞ்சு தோல்:

உங்கள் வாழ்க்கை முழுவதும் பார்த்து அலுத்துபோன மஞ்சள் நிற பற்களை அற்புதமான ஆரஞ்சு தோல் உங்கள் பற்களை சுத்தம் செய்வதோடு மஞ்சள் நிற கறைகளையும் அகற்றுகிறது. சில ஆரஞ்சு தோலகளை எடுத்து உங்கள் பற்கள் முழுவதும் தேய்க்கவும். நீங்கள் படுக்கைக்கு படுக்க செல்லும் முன் ஒவ்வொரு நாளும் இரவில் இதை செய்ய வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் பற்களை தாக்கும் கிருமிகளை அழிக்க‌ உதவுகிறது. நீங்கள் இதை ஒரு வாரம் அல்லது அவ்வப்போது செய்வதால், படிப்படியாக தெரியும் மாற்றங்களை கண்கூடாக காண்பீர்கள்.

3. ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது உங்கள் பற்களை வெண்மையான பிரகாசமாக‌ மற்றும் அழகானதாகவும் ஒரு வாரத்தில் மாற்றுகிறது. நீங்கள் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது, உங்கள் பற்களில் இதை மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யவும். நீங்கள் 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் செய்தால், உங்கள் மஞ்சள் நிற நிழல் மறைந்து கறையும் கட்டுப்படுகிறது.

4. ஹைட்ரஜன் பெராக்சைடு:

அருமையான வெள்ளை நிற பற்களுக்கு மற்றொரு முகவர் ஹைட்ரஜன் பெராக்சைடு. நீங்கள் கற்பனை செய்வதை விட‌ மஞ்சள் நிற கறைகளை வெகு விரைவில் போக்குகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை நீங்கள் வாயில் ஊற்றி வாயை கொப்பளிக்க வேண்டும், இதை முழுங்காமல் செய்ய வேண்டும்.  இது உங்களுக்கு பயனளிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் சமையல் சோடா இவற்றை கலந்து பல் துலக்கவும். பின் நீங்கள் வழக்கமான பற்பசை பயன்படுத்தி உங்கள் பல் துலக்கலாம்.

5. எலுமிச்சை:

எலுமிச்சையானது உங்கள் வாழ்நாள் முழுவதும் மஞ்சள் நிற‌ பற்களை வெளுக்கும் பண்புகளை கொண்டுள்ளன‌. இதற்கு நீங்கள் செய்யவெண்டியது என்னவென்றால், உப்பு ஒரு சில தேக்கரண்டி மற்றும் எலுமிச்சை சாறு ஒரு சில துளிகள் எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை எடுத்து கறை படிந்த பற்கள் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யவும். பிறகு இது தீவிரமாக வேலை செய்ய தொடங்கும். இதை அப்படியே ஓரிரு நிமிடங்களில் விட்டு வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி வாயை கொப்பளிக்கவும். நீங்கள் இதை வாரம் இருமுறை செய்யலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive