பிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த, ஆங்கிலம்
2ம் தாள் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சலவை சோப், ஷேவிங் கிரீம், ஷாம்பு பயன்பாடு குறித்த கேள்விகள் இடம்
பெற்றிருந்தன. தேர்வில் காப்பியடித்த, 15 பேர் சிக்கினர்.
நேற்றைய
தேர்வில், மொத்தம், 80 மதிப்பெண்களுக்கு ஏழு பிரிவுகளில், வினாக்கள் இடம்
பெற்றன. ஆங்கிலம் துணைப்பாடப் புத்தகத்தில் இருந்து, 25; வாசிக்கும் திறன்,
15; வேலைவாய்ப்பு திறன், 15; வாழ்வியல் திறன், 5; ஆக்கத் திறன் மற்றும்
போட்டி போடும் திறனுக்கு தலா, 5; பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்புத்
திறனுக்கு, 10 மதிப்பெண் என, வினாக்கள் இடம் பெற்றன. இதில், 10
மதிப்பெண்களுக்கு கட்டுரை எழுதும் வினாவில், 'என்ரோல் மாடல் - தற்காலத்தில்
கணினி யின் பயன்பாடு -
மாணவர்களும்,
சமூக சேவையும்' போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு, 10
மதிப்பெண் கேள்வியில், பொதுத்துறை நிறுவனத்தில், தனி உதவியாளர் பணியில் சேர
விண்ணப்பிக்கும் முறை குறித்து கேட்கப்பட்டிருந்தது. ஆங்கிலப் பழமொழிகள்;
குறிப்பிட்ட முகவரிக்கான சாலை வரைபடம் வரைதல்; சலவை சோப், ஷேவிங் கிரீம்,
ஷாம்பு, மொபைல்போன் மற்றும் ஆடையின் பயன்பாடு குறித்தும் கேள்விகள் இடம்
பெற்றன. நேற்று, இரண்டு மாணவர்கள், 13 தனித்தேர்வர்கள் என, மொத்தம், 15
பேர் காப்பியடித்து பிடிபட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...