தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடலூர் மாவட்டம், சிதம்பரம் துணை கலெக்டர்
எம்.அரவிந்த், நிதித்துறை சார்புச்செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குனர்
எஸ்.நடராஜன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட
இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் துணை
கலெக்டர் கே.செந்தில்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் துணைக்கலெக்டராக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் துணை
கலெக்டர் டி.ஜி.வினய், சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (வருவாய் மற்றும்
நிதி) மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...