இந்தியாவில் உள்ள இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் திருமணத்துக்குப் பிறகு
கணவரது பெயரை தங்களது இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று ஒரு
கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
திருமண பந்தங்களை இணைக்கும் ஒரு
இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40.4
சதவீத பெண்கள், திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற விரும்பவில்லை என்றே
தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்புக் கூறுகிறது. இதே போல, பெண்களின் 27
சதவீதத்தினர், திருமணத்துக்குப் பிறகும் பொருளாதார ரீதியாக தாங்கள்
சுதந்திரமாக செயல்படவே விரும்புவதாகவும், 18 சதவீதம் பெண்கள், குடும்ப
பொறுப்புகளில் இருவருமே சம பொறுப்பை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும்
கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...