9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 3-வது
நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து
காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவரையும் உடனடியாக பட்டதாரி
ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சில இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து
3-வது நாளாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பார்வையற்ற கல்லூரி
மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் 7 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க நிர்வாகி திவாகர் என்பவர் கூறியதாவது:-
உடன்பாடு ஏற்படவில்லை
எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக காலை 11 மணிக்கு சமூக நலத்துறை அமைச்சர்,
ஆணையரை, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்க பொதுச்செயலாளர்
அசோக்குமார் தலைமையில் எங்கள் நிர்வாகிகள் சென்று பேச்சுவார்த்தை
நடத்தினர்.
ஆனால் அதில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே எங்களை முதல்-அமைச்சர்
சந்திக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...