அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை
செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும்
மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக
வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர்
மு.முத்துவேலு தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து செவ்வியல் இலக்கியங்களில் அடிக்கருத்தும் காட்சிப்படுத்துதலும் என்ற பொருளில் பத்து நாள் பயிலரங்கத்தை நடத்தியது. பயிலரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். தமிழியல்துறைத் தலைவர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: முதுகலைத் தமிழில் முதல் ஐந்து இடங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கவும் செம்மொழி மத்திய நிறுவனம் முயற்சிக்கும். அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையின் செயல்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பழந்தமிழ் இலக்கியங்களில் சிறப்புகளையும், பெருமைகளையும் வெளிக்கொணரும் வகையில் பயிலரங்கினை அமைத்து, பயிலரங்க கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுவது அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையின் சாதனையாகும் என முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜே.வசந்தகுமார் பங்கேற்று வாழ்த்துரை யாற்றினார். அவர் பேசியது: பழமையும், பெருமையும் கொண்ட தமிழியல்துறை பல்வேறு ஆக்கப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழ் வளர்ச்சி பணிகளில் அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறைக்கு என்று தனித்த இடம் உண்டு. காலத்திற்கேற்ப தமிழியல்துறையும், தமிழ் ஆய்வுகளும்
நவீனப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பதிவாளர் ஜே.வசந்தகுமார் தெரிவித்தார்.
பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.ராஜா நன்றி கூறினார்.
விழாவில்முன்னாள் பேராசிரியர் காமாட்சிநாதன், தொலைதூரக்கல்வி இயக்கக
தமிழ்ப்பிரிவு தலைவர் முனைவர் ந.வெங்கடேசன், பேராசிரியர்கள், மாணவர்கள்
பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...