Home »
» 'பிளஸ் 2'பொதுத்தேர்வு துவக்கம்:போக்குவரத்து கழகத்திற்குஉத்தரவ
'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5) துவங்குகிறது. இலவச பஸ் பாஸ்
பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வு காலம் என்பதால் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர் நலன் கருதி மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு அளித்த உத்தரவு: இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை காண்பிக்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. பள்ளி சீருடை அணிந்திருந்தால் போதும். சீருடை அணிந்த மாணவர்கள் பஸ் ஸ்டாப் தவிர்த்து உதவி கேட்டால் பஸ்சில் ஏற்றி கொள்ள வேண்டும். தேர்வு முடியும் நாள் வரை தேவையான பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களை இயக்கக்கூடாது. விதிமுறை மீறும் டிரைவர், கண்டக்டர்கள் குறித்து அருகில் உள்ள டிப்போக்களில் வண்டி எண், தடம் எண், நேரம், சம்பவ இடம் குறித்து புகார் கூறலாம். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...