Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை : பிளஸ் 2 தேர்வில் புதிய நடைமுறைகள்

        பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார். 
 
      பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வுகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. சிஇஓ நாகராசு, கூடுதல் சிஇஓ கணேசன், டிஇஓ (பொ) பாலு, மாவட்டதொடக்க கல்வி அதிகாரி எலிசபெத் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசியது: பிளஸ் 2 தேர்வில் நடப்பாண்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் தற்காலிக மதிப் பெண்  சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் நடப்பாண்டு முதல் தேர்வு மையத்தில் மாணவர்கள் ‘ஏ-பி‘ முறையில் அடுத்தடுத்து உட்கார வைக்கப்படுவார்கள்.

இதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 6 பாடங்களுக்கான வினாத்தாள்களில் ஏ மற்றும் பி வரிசை குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றில் பகுதி-1ல் ஒரு மதிப்பெண் வினாக்கள் வெவ்வேறு வரிசையில், வினா எண்களின் வரிசை மாறுபட்டிருக்கும் வகை யில் அச்சிடப்பட்டிருக்கும். இதன்படி முன்பின் அமர்ந்துள்ள மாணவர்களுக்கும் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள மாணவர்களுக்கும் ஒரே வரிசைகொண்ட வினாத்தாள் வழங்குவதை தவிர்க்கும் பொருட்டு முன், பின்னாக ஒவ்வொரு வரிசையிலும் 5 மாணவர்கள் என அறைக்கு 20பேர் அமருகிற வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளதால், தேர்வு மையங்களில் பணிபுரிவோர் எந்த ஒழுங்கீன செயல்களுக்கும் துணை போகாமல் இருக்கவேண்டும். பறக்கும் படையினர் துரிதமாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு, தேர்வுக்கு இடையூறின்றி பணியாற்றவேண்டும். இவ்வாறு லதா பேசினார். இந்த கூட்டத்தில் தேர்வு மையங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், சிறப்பு பறக்கும் படையினர், ரூட் அலுவலர்கள், வினாத்தாள் கட்டுகாப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.




1 Comments:

  1. Old News !!!

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கும் அரசாணை செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Updated: Fri, 26 Sep 2014 10:23

    ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என்ற அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010-ல் உத்தரவிட்டது.

    இந்த அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஆதிதிராவிடர் கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கலாம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதி ஒன்றை கொண்டுவந்தது. அதன்படி தமிழகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தகுதித் தேர்வில் வெற்றிபெற 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என தமிழக அரசு 2014 பிப்ரவரி 2-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

    2012-ம் ஆண்டு வரை நடந்த தகுதித்தேர்வில 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் எனக் கூறிவிட்டு, தற்போது மதிப்பெண் சலுகை வழங்கியது நியாய மற்றது. மேலும் மதிப்பெண் சலுகை வழங்கும் விதியை கொண்டுவருவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சி லுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உண்டு. எனவே, மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 60 சதவீத மதிப் பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

    இந்த வழக்கில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் நோக்கத்தில் தகுதியானவர்கள் ஆசிரியர்களா கத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    அதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை வழங்குவதை ஏற்க முடியாது.

    எனவே ஆசிரியர் தகு தித் தேர்வில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கும் அரசாணை செல்லாது என்று கூறி, அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இருப்பினும் இந்த அரசாணை அடிப்படையில் பணி நியமனங்கள் நடை பெற்றிருந்தால் அதில் தலை யிடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive