உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
பறக்கும் படையினரின் கண்காணிப்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்ற நிலையில், சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாவட்ட கல்வி ஆய்வாளர் கூறுகையில், “சோனா அர்ஜூன்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாபு சிங் இன்டர் காலேஜில் உள்ள தேர்வு மையத்தில் ஆங்கிலம் முதல் தாளுக்குப் பதிலாக இரண்டாம் தாளுக்கான வினாத்தாளை ஆசிரியர்கள் விநியோகம் செய்துள்ளனர். ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான தேர்வு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடத்தப்பட வேண்டும்.
தவறான வினாத்தாளை கொடுத்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகி மற்றும் 4 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...