பிளஸ் 2 வேதியியல் தேர்வில் எதிர்பாராத வினாக்கள், திரித்து கேட்கப்பட்ட கேள்விகளால், மாணவர்கள் திக்குமுக்காடினர்; அதேநேரத்தில், கணக்கு பதிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கூறினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; நேற்று, அறிவியல் பிரிவு
மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு நடந்தது. ஒரு மதிப்பெண், 5 மதிப்பெண், 10
மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் ஏமாற்றத்துடன்
கூறினர். படித்த வினாக்கள் அதிகளவு இடம்பெறாததால் வருத்தம் அடைந்தனர்.
ஆனால், கணக்கு பதிவியல் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால், மாணவ,
மாணவியர் உற்சாகமாக காணப்பட்டனர்.
அப்துல் ராசிக், ஆசாத் மெட்ரிக் பள்ளி: வேதியியலில் எதிர்பார்த்த வினாக்கள்
இல்லை. 5 மதிப்பெண், 10 மதிப்பெண் பகுதிகளில், பதில் எழுத முடியாத கடின
வினாக்கள் இடம் பெற்றிருந்தன. பல வினாக்களுக்கு விடை எழுத முடியவில்லை.
இவ்வளவு கஷ்டமாக வினாத் தாள் இருக்கும் என்று, எதிர்பார்க்கவே இல்லை.
மோகன பிரியா, வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி: வேதியியல் தேர்வில் பல வினாக்கள்
திரித்து கேட்கப்பட்டி ருந்தன. எதிர்பார்த்ததை விட, வினாக்கள் கஷ்டமாக
இருந்தன. அனைத்து வினாக்களுக்கும், விடையளிக்க வாய்ப்பு இல்லாததால், இத்
தேர்வில் நிறைய பேருக்கு மதிப்பெண் குறையும்.
கார்த்திகா, பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி: கணக்கு பதிவியலில், பலமுறை
படித்த வினாக்களே வந்திருந்தன. ஏற்கனவே பலமுறை எழுதிய பதில்கள் என்பதால்,
தேர்வறையில் பயம், பதட்டமின்றி எழுத முடிந்தது. எதிர்பார்த் ததைவிட, அதிக
மதிப்பெண் பெறுவேன்.
தாரணி, வி.ஏ.டி., டிரஸ்ட் பள்ளி: வணிகவியல் பாடத்தேர்வு சிரமமாக
இருந்ததால், கணக்கு பதிவியலும் கஷ்டமாக இருக்குமோ என பயந்தேன். ஆனால்,
எளிதாக இருந்தது. எல்லா பகுதிகளிலும், புத்தகத்தில் இருந்தே வினாக்கள்
வந்திருந்தன; தேர்வில் எந்த கஷ்டமும் இல்லை.
வெள்ளைசாமி, வேதியியல் ஆசிரியர், பிரண்ட்லைன் பள்ளி: ஒரு மதிப்பெண்
வினாக்கள், யோசித்து பதில் அளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. 10
மதிப்பெண், 5 மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் அவ்வளவு கஷ்டமாக இல்லை.
ஓரிரு வினாக்கள், நேரடியாக கேட்கப்படாமல், சற்று சிக்கலான முறையில்
கேட்கப்பட்டிருந்தன. ஆனால், பதில் எளிமையானதே. நன்கு படித்த மாணவர்கள்,
நல்ல முறையில் எழுதியிருக்க வாய்ப்புள்ளது.
அரிய நாச்சியம்மாள், கணக்கு பதிவியல் ஆசிரியை, பழனியம்மாள் மாநகராட்சி
பள்ளி: எதிர்பார்த்த வினாக்களே, அதிகம் கேட்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்
நல்ல முறையில் தேர்வை எழுதியுள்ள னர். படிப்பில் பலவீன மான மாணவர்கள் கூட,
எளிதாக தேர்ச்சி பெற்று விடுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பள்ளி மாணவ
மாணவியர் 21,622 பேரில் 119, தனித்தேர்வர் 669 பேரில் 143 என, நேற்றைய
தேர்வில் 262 பேர் பங்கேற்கவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...