பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில்,
பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள்
கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல்
பாடங்களை துவங்குகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள், ஜனவரி முதல், பிளஸ் 1
மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றன. எனவே, இந்த முறை மே முதல்
வாரத்தில் இருந்து, பிளஸ் 1 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2
பாடங்களை துவங்க திட்டமிட்டு உள்ளோம்.
பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர், கோடை விடுமுறையில் பாடம் எடுக்க, தாங்களே
முன்வந்துள்ளனர். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர், அதிக கட்டணம் செலுத்தி
கோடையில், தனியார் 'டியூஷன்' செல்ல வேண்டிய தேவை இல்லை.இவ்வாறு, அவர்கள்
தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...