அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி
பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,
வணிகவியல் - கணினி பிரிவு, வணிகவியல் - சர்வதேச வணிகம் மற்றும் கணினி
தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு, உதவி பேராசிரியர் பணிக்கு, நேரடி நியமன பணி,
2013ல் துவங்கியது.
ஒரு பணியிடத்துக்கு ஐந்து பேர் என்ற
விகிதத்தில், தேர்வானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது; 43
பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
கணினி தொழில்நுட்பத்துக்கு யாரும் தகுதி பெறவில்லை. வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...