தமிழக அரசின் 2015 - 16ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி 23ம் தேதி முடிந்தது. அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின் அவர் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் இது தான். ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறுகிறதா என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டசபை விதி 26(1)ன் கீழ் சட்டசபையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2015 - 16ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். முன் பண மானிய கோரிக்கைகள் 28ம் தேதி சட்டசபைக்கு அளிக்கப்பட வேண்டும் என கவர்னர் கூறியுள்ளார். எனவே 25ம் தேதி காலை 10:00 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் 2014 - 15ம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை 28ம் தேதி தாக்கல் செய்யப்படும். இவ்வாறு ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...