25 லட்சம் 'காஸ்' சிலிண்டர்; 12 ஆயிரம் ஊழியர்; ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வசூல்! வீடுதோறும் சப்ளையில் நடக்கும் கொள்ளையோ கொள்ளை
காஸ்
ஏஜன்சிகளில் பணிபுரியும், 12 ஆயிரம் ஊழியர்கள், ஒரு நாளைக்கு, 25 லட்சம்
சிலிண்டர் வினியோகம் செய்வதன் மூலம், மக்களிடம் இருந்து, 7.50 கோடி ரூபாய்
கட்டாய வசூல் செய்கின்றனர்.
தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, வீடு, 1.53 கோடி; வணிகம், 25 லட்சம் என, மொத்தம், 1.78 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1,200 காஸ் ஏஜன்சிகள் உள்ளன. ஒரு ஏஜன்சிக்கு, 8,000 - 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்; 10 ஊழியர் பணிபுரிகின்றனர். தினமும் சராசரியாக, 25 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. காஸ் ஏஜன்சிக்கு, எண்ணெய் நிறுவனங்கள், ஒரு சிலிண்டருக்கு, வீடு, 44.60 ரூபாய்; வணிகம், 44.80 ரூபாய் கமிஷன் தொகை வழங்குகின்றன. இதில், 18 ரூபாய், வாடிக்கையாளர் இடத்திற்கு, சிலிண்டர் கொண்டு செல்வதற்காக வழங்கப்படுகிறது. ஆனால், ஏஜன்சி ஊழியர்கள், வீடுகளுக்கு, சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, கட்டாய பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு நாளைக்கு, 25 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்வதன் மூலம், 7.50 கோடி ரூபாய், கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: சிலிண்டர் சப்ளை செய்யும் போது, தூக்கி வரும் சுமையை கருத்தில் கொண்டு, ஊழியருக்கு, 'பில்' தொகையுடன், விருப்பப்பட்டு, 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், 50 ரூபாய் கொடுக்குமாறு, ஏஜன்சி ஊழியர்கள், அதிகாரமாக கூறுகின்றனர். அதை கொடுக்க மறுத்தால், அடுத்த சிலிண்டரை, குறித்த நேரத்தில் வினியோகம் செய்வதில்லை. வீட்டில் ஆள் இருந்தாலும், 'சிலிண்டர் கொண்டு வரும் போது, உங்கள் வீடு பூட்டி இருந்ததால், உங்கள் சிலிண்டரை ரத்து செய்து விட்டோம். புதிதாக பதிவு செய்யுங்கள்' என, அலைக்கழிக்கின்றனர். ஏஜன்சி உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்தும், பலன் இல்லை, என்றார்.
எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய அமைச்சகத்தின், 'மார்க்கெட் டிசிப்ளின் கைட்லைன்ஸ்' விதிப்படி, மக்களிடம், சிலிண்டர் வினியோகம் செய்யும் போது, 'பில்' தொகையை விட, கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு பணம் வசூலித்தால், அபராதம் முதல், ஏஜன்சி உரிமம் ரத்து வரை நடவடிக்கை எடுக்க முடியும். காஸ் ஏஜன்சிகளுக்கு சென்று, வாடிக்கையாளர் நேரடியாக, சிலிண்டர் வாங்கும் போது, அதற்கு, ஏஜன்சி தரப்பில், 18 ரூபாய் தர வேண்டும். எனவே, கட்டாய பண வசூல் மற்றும் பணம் தராதது குறித்து, மக்கள், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம், எழுத்துபூர்வமாக புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...