பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 346 உதவியாளர்களுக்கு மார்ச் 21-இல் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மூலம் உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்
துறைக்கு 346 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
இதில் பங்கேற்க உள்ளவர்கள் கலந்தாய்வு
தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச்
சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை தவறாமல் எடுத்துவர
வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...