ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன் தனது சம்பளத்தில் 20 சதத்தை
மாணவர்களின் நலனுக்கு மாதந்தோறும் வழங்கி வருகிறார்.ஊத்தங்கரை அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன். இவர் கடந்த 2013-14-ஆம்
கல்வியாண்டில் ரூ.73 ஆயிரத்தையும், 2014-15-ஆம் கல்வியாண்டில் ரூ.79
ஆயிரத்தையும் தனது சம்பளத்தில் இருந்து வழங்கியுள்ளார்.
இவர் தற்போது, 2015-16-ஆம் கல்வியாண்டுக்காக தனது சம்பளத்தில் இருந்து 20
சதத்தை மாணவர்களின் நலனுக்காக வழங்க சம்மதித்து, அதற்கான உறுதிமொழிப்
பத்திரத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பொன்னுசாமியிடம் வழங்கினார்.இவரது
மனைவி பிரபாவதி. இந்தத் தம்பதியின் மகன்கள் ஹரிஹரன்,
ரிஷ்வந்த். இவர், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும்
ஏழை, பெற்றோரை இழந்த, மாற்றுத் திறனாளி மாணவர்கள் என, 4,000 பேருக்கு இலவச
சீருடையை வழங்கியுள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் 920 மாணவர்களுக்கு
பிறந்தநாள் பரிசு வழங்கியுள்ளார். அதிக மதிப்பெண்கள் பெற்ற 360
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார். அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10
ஆயிரம் மதிப்பிலான முதலுதவிப் பெட்டிகளை வழங்கியுள்ளார்.ஆசிரியர் கணேசனை,
ஸ்ரீ வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன், அதியமான்
கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனி.திருமால்முருகன்உள்ளிட்ட பலர்
பாராட்டினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...