Home »
» மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் மார்ச்.20 ஆர்ப்பாட்டம்.
மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கு கண்டனம்
தெரிவித்து, மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்ட போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இது குறித்து மேலும்
இன்று(செவ்வாய்க்கிழமை), தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாவட்ட எஸ்.டி.எப்.ஐ. அமைப்பாளர் சே.முத்து முருகன் தெரிவித்தது:
மேற்கு வங்க மாநிலத்தில் தனது பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தைக் கடுமையாக
எதிர்த்தும், இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கு பழைய முறை ஓய்வூதிய
திட்டத்தை நிறைவேற்றவும், அந்த மாநிலத்தில் அகில இந்திய ஆசிரியர்
கூட்டமைப்பில் இணைந்துள்ள ஆசி ரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம்
நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களை திரிணாமூல் காங்கிரஸைச் சே ர்ந்தவர்கள்
தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்த கட்சியைச் சேர்ந்த ஆசிரியர்
இயக்கத்துடன் இணைய துன்புறுத்தி வருகின்றனர். இணைய மறுக்கும் ஆசிரியர்களை,
அவர்களது பள்ளிகளுக்கே சென்று தாக்குதல், ஆசிரியர்களதுசொத்துக்களை
அபகரித்தல்,சங்க கட்டடங்களையும் சேதப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறைகளில்
தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 1985, 1988-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்
போராட்டத்திற்கு மேற்கு வங்க மாநில ஆசிரியர்க ள் ஆதரவு தெரிவித்தனர்.
2003-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பங்களுக்கு ரூ.10
லட்சம் நிதி உத வி அளித்தனர். எனவே மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள்
தாக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, நாடு முழுவதும் மாவட் ட தலைநகர்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் அளவில் ராமநாதபுரம்
அரண்மனை முன்பாக எஸ்டிஎப்ஐ கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதில்
ஆசிரியர், ஆசிரியைகள் திரளானோர் பங்கேற்கும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...