பொதுத்தேர்வு
சமீபத்தில் நடந்த பத்தாம்
வகுப்பு – தமிழ் இரண்டாம் தாளில் பல வினாக்கள் குளறுபடிகளால் அமைந்துவிட்டன. தமிழ்
ஆசிரியச் சான்றோர்கள் பலரும் நமக்கேன் வம்பு என்று மரபுப்படி வாய்மூடித் தியானித்துக்கொண்டிருக்கிறார்கள். இது வருத்தம் தரும் செய்தி. இந்த இரண்டாம் தாளில் என்ன என்ன குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன
என்பதைக் கீழே பார்க்கலாம்.
வினா எண்
|
குளறுபடி
|
என்ன வந்திருக்கவேண்டும்
|
இழப்பீடு மதிப்பெண்
|
1
|
பயிற்சி மற்றும் எ.காவில்
இல்லாதது
|
பயிற்சி வினாப்பகுதி
|
1
|
2
|
பயிற்சி மற்றும் எ.காவில்
இல்லாதது
|
பயிற்சி வினாப்பகுதி
|
1
|
3
|
கோடிட்ட இடம் விடைதேர்கவில்
வந்துள்ளது
|
விடைதேர்க
|
1
|
5
|
விடைதேர்க பகுதியே இல்லை
|
கேட்டு இருக்கக்கூடாது
|
1
|
7
|
கோடிட்ட இடம் பகுதி இல்லை
|
வேறு ஏதாவது வினா
|
1
|
9
|
விடைதேர்கப்பகுதி மாற்றி
கேட்கப்பட்டுள்ளத
|
வேறு ஏதாவது வினா
|
1
|
10
|
அணிப்பகுதியில் கோடிட்ட
இடம் இல்லை
|
ஏதாவது ஒரு இயலில் கேட்கலாம்.
|
1
|
12
|
பயிற்சி மற்றும் எ.காவில்
இல்லாதது
|
பயிற்சி வினாப்பகுதி
|
1
|
13
|
விடையைக் கேள்வியாகத்
தரப்பட்டுள்ளது
|
வினா
|
1
|
14
|
வினாவில் வேற்றுமை உருபு
தரவில்லை
|
வேற்றுமை உருபு தந்திருக்கவேண்டும்
|
1
|
16
|
பயிற்சிப் பகுதியில் இல்லை
|
உரைநடைப்பகுதி
|
1
|
18
|
பயிற்சிப்பகுதியில் இல்லை
|
புத்தகத்தில் உள்ள உரைநடைப்
பயிற்சிப் பகுதி
|
1
|
19
|
பயிற்சி வினாவில் இல்லை.
|
சொல் - பொருத்தம்
|
1
|
20
|
புத்தகத்தில் இல்லை.
6-9 வகுப்பில் உள்ளது
|
புத்தகத்தில் உள்ள பயிற்சி
|
1
|
21
|
பாடத்தில் சிறுவினாப்
(4 மதி) பகுதி 2 மதிப்பெண்ணில் கேட்கப்பட்டுள்ளது.
|
பாடத்தில் உள்ள குறுவினாக்களில்
ஒன்று.
|
2
|
24
|
குறுவினாப் பகுதியில்
இல்லை, உரிய விடையான 1 மதி்ப்பெண் 2 மதிப்பெண்ணில் கேட்கப்பட்டுள்ளது.
|
குறுவினாக்கள் 7 வினாவில்
ஏதாவது 1 வினா
|
2
|
27
|
பயிற்சிப்பகுதியில் இல்லை.
எப்பகுதியில் இருந்து கேட்கப்படவேண்டும் என்ற திட்டமும் இல்லை.
|
புத்தகத்தில் உள்ள செய்யுள்பகுதி
|
2
|
29
|
இலக்கணப்பகுதியில் உள்ள
பயிற்சி, எ..கா வினா கேட்கப்படாமல் திருக்குறள் பாடத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
|
புத்தகத்தில் இலக்கணப்பகுதியிலிருந்து
அல்லது அணி வினாப்பகுதி
|
5
|
30
|
திருக்குறளை ஒரு வரியாக
அச்சிட்டது
|
சரியான அமைப்பு
|
|
34-அ
|
பயிற்சி வினாவில் சில
வார்த்தைகளை மாற்றி வினாவாகத் தந்தது
|
பயிற்சி வினாப்பகுதி
|
3
|
34-ஆ
|
வழக்கமாகத் தரப்படும்
வினா மாதிரி பதிலாகப் புதிதாகத் தந்திருப்பது மற்றும் முழுமையற்ற வினா
|
இ, உ ஆகியவற்றிற்கு எண்
தந்திருக்கவேண்டும். புத்தகத்தில் உள்ள பயிற்சி அரபு எண்ணைத் தந்திருக்கலாம். அல்லது
பொதுத் தேர்வு வினாக்கள் தந்திருக்கலாம்.
|
2
|
38
|
படிவத்தை முழுவதும் நிரப்பும்
படியான முழுமையான வினாப்பகுதி இல்லை. பெயர், தொகை மட்டும் உள்ளது.
|
வங்கிக் கணக்கு எண், நாள்,
இடம், கிளை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ,
|
3
|
40 - அ
|
முதல் ஐந்து இயலுக்குள்
கேட்கப்படாமல் அடுத்த ஐந்து இயலில் 7 வது இயல்
|
1-5 இயலில் உள்ள ஏதாவது
ஒரு வினா
|
10
|
41 - அ
|
6-9 வகுப்பில் உள்ள கட்டுரைகளில்
ஒரு வினா
|
பத்தாம் வகுப்பில் உள்ள
பொது்க்கட்டுரைகளில் 1-5 இயல்களில் ஒன்று
|
10
|
41 - ஆ
|
6-9 வகுப்பில் உள்ள கட்டுரைகளில்
ஒரு வினா
|
பத்தாம் வகுப்பில் உள்ள
பொது்க்கட்டுரைகளில் 6-10 இயல்களில் ஒன்று
|
10
|
மரபான, வழக்கமான குளறுபடிகள்
1.
விடை தேர்கவில் உள்ள வினாக்கள் கோடிட்ட இடத்திலும், கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதியில் உள்ளவை சரியான
விடை தேர்கவிலும் மாற்றிக் கேட்கப்படுவது.
2.
புத்தகத்தில் உள்ள சரியான விடை தேர்க, கோடிட்ட இடம்
நிரப்புக வினாக்கள் கேட்கப்படுவதில்லை.
3.
சுருக்கமான விடையளி பகுதியில் வினா 11. வல்லினம்
மிகும்,மிகா இடம். வினா 20 நிறுத்தற்குறியிடு. 12 முதல் 19 வரை உள்ள வினாக்கள் எப்பகுதி
என்பதில் தெளிவு இன்னுவரை இல்லை.
4.
குறுவினாப் பகுதியில் எந்த எந்த இயலில் இருந்து
கேட்கவேண்டும் என்ற திட்டம் இல்லை.
5.
சான்று கொடுத்து அணியைக் கேட்பது அல்லது அணியின்
பெயர் தந்து வினா கேட்பது வழமை. ஆனால் இதுவரை சான்று அணிக்கான திட்டம் அமையவில்லை.
6.
துணைப்பாடப்பகுதியில் 18 வினாக்கள் உள்ளன. இன்னும்
3 வினாக்கள் எந்தெந்த இயலுக்குள் அமையவேண்டும்
என்ற திட்டம் இல்லை.
7.
3 படிவங்களுகளை நிரப்பத் தேவையான வினாக்கள் முழுமையாக்கப்படவில்லை.
8.
2 கடிதங்களில் ஒன்றை எழுத வேண்டும் எனில் முதல்
வாய்ப்பு , இரண்டாம் வாய்ப்பு வினாப்பகுதிக்கான இயல்கள் திட்டமிடப்படவில்லை.
9.
பத்தாம்வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் ஒவ்வொரு இயலிற்குப்
பிறகும் கட்டுரைப் பயிற்சி உள்ளது. அதாவது மாதந்திர கட்டுரைகள் உள்ளன. மொத்தம் 9 கட்டுரைகள்.
ஆனால் இதுவரை பொதுத்தேர்வில் 6-9 வகுப்பு வரையில் உள்ள கட்டுரைகள் மட்டும் கேட்கப்படுகின்றன. அப்படி எனில் பத்தாம் வகுப்பு தமிழ்ப்புத்தகத்தில்
உள்ள 9 கட்டுரைகளை என்ன செய்ய?
என்ன செய்யவேண்டும்?
1.
இரண்டாம் தாளில் உள்ள 41 வினாக்களுக்கும் சரியான
வினாத்தாள் தி்ட்ட அமைப்பு ஒழுங்குப்படுத்தவேண்டும்.
2.
பாடத்தின் பின் உள்ள பயிற்சி வினாக்கள் கேட்கப்படவேண்டும்.
வகைமாதிரிகளை மாற்றாமல் கேட்கவேண்டும்.
3.
பத்தாம் வகுப்பில் பாடப்புத்தகத்தில் உள்ள வினாப்பகுதிக்காக
6-9 வகுப்பில் உள்ள வினாக்கள் கேட்கப்படக்கூடாது.
4.
பொதுக்கட்டுரைகள் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில்
இருந்துதான் கேட்கப்படவேண்டும். வந்தவரைக்கும் இலாபம் என்று 8,9 வகுப்பில் உள்ளதை மட்டும்
கேட்கக்கூடாது.
5.
புத்தகத்தில் உள்ள கடிதங்களை மட்டும் கேட்கவேண்டும்.
6.
வினா அமைப்பினை மாற்றினால் நலம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...