மகளிர்
மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் நலனுக்காக,
ஊட்டச்சத்து குறைவு, உணவு வினியோகம், பாக்யலட்சுமி திட்டம்
போன்றவற்றுக்காக, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் முறையே, மாதந்தோறும், 500 ரூபாய், 250 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். 'ஆசிட்' தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு, இழப்பீடு வழங்கும் வகையில், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களுக்கு, குறைந்தபட்சம், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். பாலியல் தொழிலாளர்கள் புனர்வாழ்வுக்காக, அவர்களுக்கு, 'சேத்தனா' என பெயரிடப்பட்டு, ஒவ்வொருவருக்கும் நேரடியாக, 20 ஆயிரம் ரூபாய், அரசு அங்கீகாரம் பெற்ற சொசைட்டி அல்லது வங்கிகள் மூலம் வழங்கப்படும். இவர்களுக்காக, 30 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், 7.15 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஹெல்ப் லைன்' மையங்கள் துவங்கப்படும். இத்திட்டங்களுக்காக, 4,232 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 1.5 லட்சம் வீடுகள் இலவசம்
'எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, 1.5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்' என, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: கிராமப்புறங்களில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் வீடுகளும், நகரங்களில், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 50 ஆயிரம் வீடுகளும் கட்டித் தரப்படும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், சமுதாயத்தில், சரி சமமான அளவில் மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக, இவர்களின் மேம்பாட்டுக்காக, 16,356 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு மனைகளும் இலவசம்: நிலம் இல்லாத எஸ்.சி., - எஸ்.டி., குடும்பத்தினருக்கு, கிராமப்புறங்களில், 30 ஆயிரம் வீட்டு மனைகளும், நகரங்களில், 15 ஆயிரம் வீட்டு மனைகளும் ஒதுக்கப்படும். தனி சுடுகாடுகள் இல்லாத பகுதிகளில் வசிக்கும், எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்காக, சுடுகாடுகள் அமைக்க நிலங்கள் வாங்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
குறைந்த விலையில் அரிசி, கோதுமை: ஏ.பி.எல்., கார்டுகளுக்கு (ரேஷன் கார்டுகள்) தலா, மூன்று கிலோ அரிசி, இரண்டு கிலோ கோதுமை வழங்கப்படும். குடும்பத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர் இருந்தால், ஐந்து கிலோ அரிசி, ஐந்து கிலோ கோதுமை வழங்கப்படும். அரிசி, கிலோ, 15 ரூபாய்க்கும்; கோதுமை, கிலோ, 10 ரூபாய்க்கும் வழங்கப்படும். புதிய கார்டுகளுக்கான விண்ணப்பங்கள், மே 1ம் தேதியிலிருந்து ஏற்கப்படும்.
வர்த்தக வரி வாயிலாக ரூ.46,250 கோடி வருவாய்
பொருட்கள் மற்றும் சேவை வரியை, மத்திய அரசு, மறைமுகமாக அமல்படுத்தியிருப்பதால், மாநில அரசு அது தொடர்பான மாற்றங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தற்போது, பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்திருப்பதால், வரி வசூலிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும், பல மாநிலங்களும் வரி விதிப்பை மாற்றி அமைத்தாலும், கர்நாடகா அரசு, எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை. இந்தாண்டு, வர்த்தக வரி மூலம், 46,250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*அரிசி, நெல், கோதுமை, உணவு தானியங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய்க்கு குறைவான காலணிகளுக்கு வரியில்லை; கைவினை பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* மொபைல் போன் சார்ஜர் மதிப்பு கூட்டுவரி, 5.5 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. சோலார் மின்சாரத்துக்கு பயன்படுத்தும் பேனல்களுக்கு, மதிப்பு கூட்டுவரி தவிர்க்கப்படுகிறது.
* புகையிலை பொருட்களுக்கான மதிப்பு கூட்டுவரி, 17 சதவிகிதத்தில் இருந்து, 20 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...