Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"வாட்ஸ்-அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: தேர்வு மையத்தில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராதது ஏன்? அதிகாரிகள் விசாரணை

         பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் வெளியிட்ட விவகாரத்தில், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு வராதது ஏன் என்பது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

        பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் வெளியிட்ட ஆசிரியருக்கு ஒசூரில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தேர்வு மையத்தில் பணி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அந்தத் தேர்வு மையத்தில் தேர்வுப் பணிக்கு வர வேண்டிய 7 ஆசிரியர்கள் ஒரே நாளில் பணிக்கு வராததாலேயே கூடுதல் ஆசிரியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கூடுதல் ஆசிரியர்களில் ஒருவர்தான் பிளஸ் 2 கணித வினாத்தாளை படம் எடுத்து கட்செவி அஞ்சல் மூலம் வெளியில் அனுப்பியுள்ளார்.

வழக்கமாக, தேர்வுப் பணிகளுக்கு ஓரிரு ஆசிரியர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் பணிக்கு வராமலிருப்பது வழக்கமானதுதான். ஆனால், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இது தொடர்பாகவும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பிளஸ் 2 கணிதத் தேர்வில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் கட்செவி அஞ்சல் மூலம் வினாத்தாளை சக ஆசிரியர்களான கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive