Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது! :ஆசிரியர்கள் 3 மணி நேரம் நிற்க உத்தரவு

         'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.
*முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.
*அடுத்த, ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.
*காலை, 10:15 மணி முதல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்.

*மாணவர்களுக்கு சாதகமாக, தேர்வு அறை கண்காணிப்பாளர் அவர்களை காப்பிஅடிக்கவோ, 'பிட்' அடிக்கவோ உதவாத வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் படி,
*இந்த ஆண்டு தேர்வு அறைக் கண்காணிப்பாளருக்கு தேர்வு அறையில், நாற்காலி போடக் கூடாது.
*தேர்வு அறையில், மாணவர்களின், 'பெஞ்சில்' கூட கண்காணிப்பாளர் அமரக் கூடாது.
*தேர்வு துவங்கும், 10:00 மணி முதல் தேர்வு முடியும், 1:15 மணி வரை கண்காணிப் பாளர் நின்று கொண்டோ, தேர்வு அறையில் நடமாடிக் கொண்டோ, விழிப்புடன் இருக்க வேண்டும்.
*மாணவரிடமோ, அரு கில் உள்ள தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடமோ அனாவசியமாக பேசவோ, கலந்துரையாடவோ கூடாது.
*மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனத்தை யும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக் கூடாது.
*மாணவர்களிடம் தேவை யின்றி பேசுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது.
*கண்காணிப்பாளராக பணி யாற்றும் ஆசிரியர் தன் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.
*தேர்வு மையம் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளி யில், தேர்வு நாளில் பணியாற்றக் கூடாது.

அதிரடி மாற்றம்:இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனரகம் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறை இயக்குனரக உத்தரவுப்படி, வேறு மண்டலத்துக்கோ, மாவட்டங்களுக்கோ தேர்வுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




5 Comments:

  1. Wrong news....3.15 hours standing...eanna kodumai sir...

    ReplyDelete
  2. This is not a newer one usual
    In last few years no chairs in the examination hall

    ReplyDelete
  3. if any body want to work as invigilators?with our permission they put us in that duty ?it highly against the human right .

    ReplyDelete
  4. அய்யா ! நாம் வாழ்வது இந்திய சுதந்தர நாட்டிலா? தேர்வுத்துறை இயக்குநர் என்ன சர்வாதிகாரியா? கின்னஸ் சாதனைப் படைக்கும் விதிகளில் கூட இயற்கை செயல்களுக்கு (நேச்சுரல் காலிங்) என்று நேரம் ஒதுக்கப்படுள்ளது. ஆனால் 03.15 மணிநேரம் சுகர், பிரஷர் போன்ற நோயாளி ஆசிரியர்களும், 50 வய‌துக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் காவல், ராணுவம் போல் 03.15. மணிநேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஆணவத்தோடு ஆணையிட்டிருப்பது ஆசிரியர்களை மனிதர்களாக் கூட ப்பார்க்காமல், ரோபோக்களை விட கேவலமாக எண்ணி தன்னுடைய அதிகார வெறியை உமிழ்ந்து இருப்பது மனிதமற்ற செயலே. தேர்வுத் துறை இயக்குநர் தேர்வறை கண்காணிப்பாளர்களாக காவல் துறையினரையோ இல்லை இராணுவ வீரரக்ளையோ பயன்படுத்திக் கொள்ளலாம். 03.015 மணிநேரம் ஒரு மனிதன் நின்று கொண்டே இருந்தால் அவன் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்படும் என்பது மனிதம் என்பது அணு அளவாவது உள்ளவர்களுக்கு தெரியும். ஆணவத்தின் அதிகாரத்தின் உச்சியில் நின்று கொண்டு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ள தேர்வுத் துறை இயக்குநரின் மனிதமற்ற இந்த செயல் மனித உரிமை மீறலே, மனிதமுள்ள ஒவ்வொரு மனிதனும் குரல் கொடுத்து இயற்கை நீதியை, சட்டப்படியான உரிமையை நிலைநிறுத்த வேண்டும். ஆசிரியர்களே! மாணவர்களே! சமூக ஆர்வலர்களே! இனி எந்த அதிகாரியும் இதுபோன்ற மனிதமற்ற செயலை மனதால் கூட எண்ண அஞ்சுமளவிற்கு வலிமையாகக் குரல் கொடுத்து மனிதத்தை இயற்கை நீதியை நிலைநிறுத்துவோம்.

    ReplyDelete
  5. Severely condemned it...this is against human rights...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive