தேனி
மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் நேற்று மதியம் தொழிற்கல்வி பிரிவிற்கு
'டைப்ரைட்டிங்' தேர்வு நடந்தது. வினாத்தாள் வாங்கிய மாணவர்களுக்கு இரண்டாம்
பக்கத்தை திருப்பியதும் ஒரே அதிர்ச்சி. 2,3,மற்றும் 4ம் பக்கங்களில்
பிளஸ்2 பாடத்திற்கான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
மாணவர்கள் அறை
கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். முதல் பக்கம் மட்டும் பிளஸ் 1 பாட
கேள்விகளும், மற்ற பக்கங்களில் பிளஸ் 2 பாடத்திற்கான கேள்விகள்
கேட்கப்பட்டிருந்தது. அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட கல்வி நிர்வாகத்திடம்
புகார் தெரிவித்தனர்.
மாவட்ட
கல்வி நிர்வாகத்திடம் இருந்து 'டைப்ரைட்டிங்' தேர்வுதானே. கேள்விதாளை
பார்த்து தான் டைப் அடிக்க உள்ளனர் என கூறி அதே கேள்விதாளை வைத்து தேர்வு
எழுத வைத்தனர். 'பிளஸ் 1 பாடத்திற்கான கேள்விகள் தயார் செய்ய தலைமை
ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில்
கேள்விதாள் பிரிண்ட் செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது மாறுதலாகி
வந்து இருக்கலாம்' என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இப் பிரச்னை
குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வாசுவிடம் விளக்கம் கேட்க தொடர்பு
கொண்ட போது அலைபேசியை எடுக்க வில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...