நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச்
சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான
அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை
முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல்
செய்தார். அப்போது, சில பொருள்கள் மீது வரிச் சலுகைகளை அறிவித்தார்.
அதன்படி, நெய்தலுக்கு முன்பாக நூலுக்குப்
பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியில்
இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏலக்காய் மீது இப்போது விதிக்கப்படும்
மதிப்புக் கூட்டு வரியானது, 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும்,
செல்லிடப் பேசிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 14.5 மதிப்புக் கூட்டு வரியானது
5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும்
வகையில், அவை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வணிக
வரிகள் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில், மூன்று வகையான பொருள்கள்
மீதான வரி விலக்கும், வரி குறைப்பும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு
வருவதாகத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...