போபால்:ம.பி., தலைநகர் போபா லில், உலக யோகா
தினத்தை முன்னிட்டு நடைபெறும் யோகா நிகழ்ச்சியில், 1 லட்சம் மாணவர்கள்
பங்கேற்கின்றனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான
ம.பி., யில், உலக யோகா தினமான, ஜூன் 21ம் தேதியன்று, பள்ளி மாணவ, மாணவியரை
கொண்டு, பிரமாண்ட அளவில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு
உள்ளது. பிரதேச இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கும், இதுகுறித்து, மாநில பொதுக் கல்வி துறை அதிகாரி அகர்வால்
உத்தரவிட்டு உள்ளார்.தலைநகர் போபாலில் உள்ள, ஜம்பூரி மைதானத்தில், பிரமாண்ட
யோகா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து
கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 7ம் வகுப்பு
முதல் 11ம் வகுப்பு வரை பயிலும், 1 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து
கொள்கின்றனர்.இவர்கள், ஜூன் 16 முதல் 20ம் தேதி வரை, சிறப்பு யோகா பயிற்சி
யாளர் உதவியுடன், யோகா பயிற்சிகளை மேற்கொள்வர்.இதற்கான ஏற்பாடு களை,
அனைத்து மாவட்ட ஆட்சிரியர்கள் செய்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...