மத்திய அரசு ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்
சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்
குழுவின் (ஜேக்டோ) உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை
நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது:
மத்திய
அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற பேரணிகளில்
1 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆனால், அதன் பிறகும், தமிழக அரசு சார்பில் யாரையும் அழைத்துப் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து, அடுத்தகட்டமாக, ஏப்ரல் 19-ஆம் தேதி
மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...