புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 18 உயர் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில் ஆந்திராவில் மட்டும் 7 கல்வி
நிறுவனங்கள் அமைய உள்ளன. இந்த அறிவிப்பில் தமிழ் நாட்டுக்கு எந்தவொரு உயர்
கல்வி நிறுவனமும் ஒதுக்கப்படவில்லை.
இதேபோன்று, பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா (நாக்பூர்), பஞ்சாப் (அமிருதசரஸ்), இமாச்சலப் பிரதேசம், ஆகிய இடங்களில் ஐஐஎம் உயர் கல்வி நிலையமும், கேரளா (பாலக்காடு), சட்டிஸ்கர், கோவா, ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்க ளில் ஐஐடியும் அமைக்கப்பட உள்ளது. தெலங்கானாவில் பழங்குடியின பல்கலைக் கழகம் ஒன்றும், மத்தியப் பிரதேசத்தில் ஜனதா கட்சியை தோற்றுவித்த ஜெய் பிரகாஷ் நாராயண் பெயரில் உயர்கல்வி நிறுவனம் ஒன்றையும் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு கல்வி நிறுவனமும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...