பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல்
15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்தச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான
குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல்
10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 1.40-ம் அரசு
வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசிக்கு இது உகந்ததாக இல்லை. எனவே, இந்தத்
தொகையை ரூ. 5-ஆக உயர்த்த வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட
ஊதியம், ஓய்வூதியம் வழங்கவேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு, சமையலராக பதவி
உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து
பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கால
வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.
SUNDAY, 8 MARCH 2015
ReplyDeleteபட்டய கிளப்புங்க ஆசிரியர்களே
ோழர்களே இன்றைய சமூக வலைதளங்களில் ஜேக்டோ போராட்டசெய்திதான் தீயாய்
பரவவேண்டும்.வாட்ஸ்அப்பில் போராட்ட புகைப்படங்களை ஷேர் செய்யுங்கள்.இன்றைய
இணையவெளியில் ஜேக்டோ போராட்ட செய்திகள்தான் ட்ரெண்டாக இருக்கவேண்டும்.
புறப்படுங்க போராட்டத்தில் கலந்துகொண்டு பட்டயகிளப்புங்க ஆசிரியர் சொந்தங்களே...
ஆசிரியர் வாய்ஸ்...www.pallikodam.com
எனது அருமை சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!
ReplyDelete