பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில், எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி
அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ்
அஹமது.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில் "கற்கும் பாரதம்' திட்டத்தில் பயன்பெற விரும்பும் 15 வயது முதல்
80 வயதிற்குட்பட்ட எழுத, படிக்க தெரியாத வர்களுக்கு, வரும் 15ஆம் தேதி,
அவர்களுக்கென அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வானது, அந்தந்த ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
நடைபெறும். இந்த தேர்வை "கற்கும் பாரதம்' மையத்தில் படித்து வருபவர்கள்
உள்பட அனைவரும் எழுதலாம். மேலும், கடந்த முறை நடந்த தேர்வுகளில் தேர்ச்சி
பெறாதவர்களும் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...