"தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து,
ஏப்., 15 முதல் காலவரையரையின்றி மாநிலத்தில் உள்ள 41,763 சத்துணவு
மையங்களும் மூடும் போராட்டம் நடத்தப்படும்,” என தமிழ்நாடு சத்துணவு
பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில்
உள்ள 41,763 பள்ளி சத்துணவு மையங்களில் 80 லட்சம் மாணவர்களுக்கு உணவு
வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு சத்துணவு வழங்க மத்திய அரசு தினமும் 6
ரூபாய் உணவுப்படி வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு
1 ரூபாய் 70 காசும், பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் 80 காசும்
வழங்குகிறது. இந்த பணத்தில் தான் அரிசி, பருப்பு தவிர மற்ற மளிகை சாமான்,
காய்கறி, விறகு உட்பட எல்லாம் வாங்க வேண்டும். பணம் போதவில்லை அதிகம்
தாருங்கள் என கேட்டும் பதில் இல்லை. 40 ஆயிரம்
காலிப்பணியிடங்களை
நிரப்பவில்லை. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சத்துணவு பணியாளர்களுக்கு
அடிப்படை சம்பளம், ஓய்வூதியம் வழங்கும்படி பலமுறை அமைச்சர்கள், தலைமை
செயலாளரை சந்தித்து மனு கொடுத்தும் பலனில்லை. 2011 ல் சத்துணவு
பணியாளர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் என அறிவித்து,
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகியும்
நடவடிக்கை இல்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட
போராட்டம் நடத்தியும் பலனில்லை. ஒவ்வொரு முறையும் மாநில அரசு ஏமாற்றும்
போக்கினை கடைபிடித்து வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15 முதல்
மாநிலம் முழுவதும் உள்ள 41,763 சத்துணவு மையங்களையும் மூடி விட்டு
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...