தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு
வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர்
ஒருவரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை மட்டுமே கணக்கிட்டு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த
நடைமுறையை மாற்றி மொத்த சம்பளத்தில் 12 சதவீதம் கணக்கிட்டு பிஎப் பணத்தை
பிடிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி, ஊழியர் ஒருவரின்
அனைத்து படிகள் உள்பட மொத்த சம்பளத்தில் 12 சதவீதம் பிஎப் தொகை பிடித்தம்
செய்யும் போது அவரது பிஎப் கணக்கில் அதிக பணம் செலுத்தப்படும். அதே
நேரத்தில் அந்த ஊழியரின் நிறுவனமும் அதே அளவிற்கான தொகையை பிஎப்
நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதே நேரத்தில் குறைந்த
சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பங்கை அவர்களது விருப்பத்திற்கு
விட்டுவிடலாமா என்றும் அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...