12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை மராட்டிய மாநில கல்வி வாரியம் மறுத்துள்ளது.
மராட்டியத்தில் 12–ம் வகுப்பு மற்றும் 10–ம்
வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 12–ம்
வகுப்பு மாணவர்களுக்கான ‘செக்ரடரியல் பிராக்டிஸ்’ தேர்வு கடந்த 26–ந் தேதி
நடந்தது. மும்பை மண்டலத்தில் இந்த தேர்வு வினாத்தாள் வெளியாகி
விட்டதாகவும், எனவே அந்த பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று கல்வி
வாரியம் தகவல் வெளியிட்டதாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல்
பரவியது.
இதுபற்றி அறிந்ததும் பல மாணவர்கள் கல்வி
வாரிய ஹெல்ப்லைன் எண்ணுக்கு போன்செய்து விசாரித்தனர். மேலும் அந்த தேர்வை
எழுதிய மாணவர்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளானார்கள். இந்தநிலையில் இதற்கு
மாநில மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மறுப்பு
இது குறித்து மாநில மேல்நிலை மற்றும்
உயர்நிலை கல்வி வாரிய சேர்மன் லட்சுமிகாந்த் பாண்டே கூறுகையில்,
‘செக்ரடரியல் பிராக்டிஸ் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல்
முற்றிலும் பொய்யானது. விஷமிகள் யாரோ வதந்தியை பரப்பி உள்ளனர். எனவே
மாணவர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம்.
இதுபற்றி மாணவர்கள் யோசிக்காமல் அடுத்து வரும் தேர்வுகளை சிறப்பாக எழுதுவதற்கு தயாராக வேண்டும்’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...