தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.
மேக கூட்டம் இல்லாமல், வானம் தெளிவாக
இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் கடல்
காற்று வீசுவதால் வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
ஆனால் மற்ற உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும்.
நேற்று சேலத்தில் 100.4 டிகிரி வெயில்
கொளுத்தியது. வேலூரில் 100 டிகிரியும், கரூர் பரமத்தி தர்மபுரி
மாவட்டங்களில் 99 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.
திருச்சியில் 98 டிகிரியும், மதுரையில்
97 டிகிரியும், கோவை, பாளையங்கோட்டையில் 96 டிகிரியும், சென்னையில் 95.36
டிகிரியும் வெயில் பதிவானது.
இந்த வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து
கொண்டே செல்லும். அக்னி நட்சத்திரம் சமயத்தில் கடல் காற்று வீசாத உள்
மாவட்டங்களில் உச்சகட்டமாக 110 டிகிரி வரை வெயில் இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...