Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணித தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய 10-ம் வகுப்பு மாணவர்

படிப்பில் சுமாரான மாணவர்களை எப்போதுமே தேர்வு பயம் ஆட்டிப் படைக்கும்.
       பரீட்சைக்கு முந்தைய நாளில் இருந்தே மிகுந்த மன உளைச்சலுடனேயே அவர்கள் காணப்படுவார்கள். அதிலும் ஒரு சில மாணவர்களுக்கு கணக்கு பாடம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும். எத்தனை முறை படித்தாலும் கணக்கு பாடம் மட்டும் மண்டையில் ஏறவே மாட்டேங்குதே என்று அலுத்துக் கொள்வார்கள்.
இப்படி கணிதப் பாடத்தை கசப்பு மருந்தாகவே பார்த்து வந்தவர் 10–ம் வகுப்பு மாணவர் ராஜ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஊரப்பாக்கத்தில் வசித்து வரும் இவரது தந்தை மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று நடைபெற்ற கணித தேர்வுக்காக முன்தினம் இரவில் தூக்கத்தை தொலைத்து படித்த மாணவர் ராஜ்குமார் நேற்று காலையில் திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பதறிப்போனார்கள். மகனை தேடி வீட்டுக்கு வெளியில் வந்த போது வெளியில் கடிதம் ஒன்று கிடந்தது.
அதில், ‘‘உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாணவன் ராஜ்குமாரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில் மதியம் 1.30 மணி அளவில், மாணவன் ராஜ்குமார் கேளம்பாக்கத்தில் வனப்பகுதியில் ஆடைகள் கிழிந்த நிலையில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. இதுபற்றி வனச்சரகர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரை மீட்டு வந்தனர். அப்போது அவன், வீட்டுக்கு வெளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் கடத்திச் சென்று விட்டனர் என்று கூறினான்.
அவனது நடவடிக்கைகளில் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடத்தப்பட்டதாக எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்தையும், மாணவனின் பள்ளி நோட்டுகளையும் ஒன்றாக வைத்து பார்த்தனர். அப்போது மிரட்டல் கடிதத்தில் இருக்கும் கையெழுத்தும், நோட்டு புத்தகத்தில் இருந்த கையெழுத்தும் ஒன்று போல இருந்தது.
இதனை மாணவன் ராஜ்குமாரிடம் போலீசார் காட்டினர். இதனால் பயந்து போன அவன் கணித தேர்வுக்கு பயந்தே வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும், என்னை யாரும் கடத்தவில்லை என்றும் கூறி கதறி அழுதான்.
பரீட்சைக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவன் ராஜ்குமாரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive