Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக போலீசில் 1,078 சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு படிப்பு சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க அதிரடி திட்டம்:

          தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

   சப்–இன்ஸ்பெக்டர்கள் தேர்வு
தமிழக போலீசில் புதிதாக 1,078 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. 1,078 பேரில் 94 பேர் காவல்துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பெண் வாரிசுகளைக்கொண்டு, தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது. முதன் முதலாக இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கடந்த 10–ந் தேதியுடன் விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைந்துவிட்டது.
1.65 லட்சம் பேர்
1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்ப மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர். பெண்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் கூட ஆர்வமாக விண்ணப்ப மனுக்களை அனுப்பி உள்ளனர். விண்ணப்ப மனுக்கள் சரிபார்க்கும் பணி கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கிவிட்டது.
இதில் எழுத்து தேர்வு முதலில் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடக்கும். அதிலும் ஜெயிப்பவர்கள் இறுதியாக நேர்முகதேர்வை சந்திக்க வேண்டும். எழுத்து தேர்வு, பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 23–5–2015 அன்று நடக்கும். காவல்துறைக்கான ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 24–5–2015 அன்று எழுத்து தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. சுனில்குமார்சிங், ஐ.ஜி. வினித்வான்கடே, சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்க அதிரடி திட்டம்
இந்த தேர்வு தொடர்பாக, சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
விண்ணப்பமனுக்கள் ஒருமாத காலம் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இந்த தேர்வை பொறுத்தமட்டில் விண்ணப்பதாரர்களின் படிப்பு தகுதி பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். இதுவரை இல்லாத வகையில் விண்ணப்பதாரர்களின் படிப்பு சான்றிதழ்களை சரிபார்க்க அதிரடி திட்டத்துடன் தனிக்கவனம் செலுத்துகிறோம். போலி சான்றிதழ்கள் உள்ளதா? என்பது பற்றி 3 கட்டமாக ஆய்வு செய்யப்படும். விண்ணப்பமனுக்களில் படிப்பு சான்றிதழ் பற்றிய விவரங்கள் நிறைய கேட்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களும், விண்ணப்பதாரர்கள் நேரில் சான்றிதழ் பற்றி சொல்லும் தகவல்களும் ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை உன்னிப்பாக பார்க்க இருக்கிறோம். டி.ஐ.ஜி தலைமையில் உள்ள ஒரு குழு உண்மையான சான்றிதழ்களை இறுதிகட்டமாக நேரில் ஆய்வு செய்யும்.
இந்த ஆய்வில் போலி சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள் தனியாக கம்ப்யூட்டரில் தனி சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்படும்.
32 தேர்வு மையங்கள்
எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 32 மையங்களில் நடக்கும். அதுபோல உடற்பயிற்சி தேர்வு 15 மையங்களில் நடக்கும். நேர்மையான முறையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் தேர்வை நடத்துவதற்கு எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
விண்ணப்பதாரர்களில் நிறைய பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். தேர்வில் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர்கள், வேலைக்கு சேர்ந்த பிறகு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். ஏனெனில், தமிழை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அந்த தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாட்ஸ் அப் மூலம் தகவலை பரப்பிய 2 போலீஸ்காரர்கள் பணி இடை நீக்கம்

சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு பற்றிய அறிவிப்பை, அரசு விளம்பரமாக வெளியிடும் முன்பே, வாட்ஸ் அப் மூலம் தகவலை வெளியிட்டுவிட்டனர். இது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது.

சீருடை பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் 2 போலீஸ்காரர்கள்தான் வாட்ஸ் அப் மூலம் இந்த தகவலை பரப்பினார்கள் என்று கண்டுபிடித்து விட்டனர். அந்த போலீஸ்காரர்களில் ஒருவர் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்தவர். மற்றொருவர் சிறப்பு காவல்படை பிரிவில் உள்ளவர்.

இந்த 2 போலீஸ்காரர்களும் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அந்த போலீஸ்காரர்கள் இருவரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive