அதே வேளையில்
புதுவையில் மாணவர்களுக்கு தனி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மஞ்சள்
நிறத்தில் இயக்கப்படும் இந்த பஸ்களில் மாணவர்கள் ரூ.1 கட்டணம் செலுத்தி
பயணிக்கலாம்.
புதுவை மற்றும்
காரைக்காலில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. மாநிலத்தின் எல்லை பகுதியில்
இருந்து புதுவையின் மைய பகுதி வரை எங்கு வேண்டுமானாலும் பள்ளி, கல்லூரிக்கு
மாணவர்கள் செல்லலாம்.
மாணவர்களிடம்
இருந்து அடையாளமாக ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த
திட்டத்தின்கீழ் புதுவையில் 60 பஸ்களும், காரைக்காலில் 11 பஸ்களும்
இயக்கப்படுகிறது.
மாணவர்கள்
மட்டுமே பயணம் செய்வதால் கூட்ட நெரிசலும் இல்லை. இதனால் மாணவர்கள்
மட்டுமல்லாது பெற்றோர்களிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...