பிளஸ் 2 தேர்வு
இல்லாத நாட்களில், மார்ச், 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த,
பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், நாளை துவங்கி, மார்ச், 31ம் தேதி முடிகிறது. இந்நிலையில்,
பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து
முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு இல்லாத
நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்க உள்ளது.
தேர்வு விவரம்:* 11ம் தேதி - தமிழ்* 12, 13ம் தேதி - ஆங்கிலம், இரண்டு தாள்கள்.* 20ம் தேதி - கணினி அறிவியல், மின்னணு சாதனங்கள், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்கள்.* 24ம் தேதி - உயிரியல், தாவரவியல், வணிகவியல்.* 25ம் தேதி, இயற்பியல், தட்டச்சு, மனையியல் உள்ளிட்ட பாடங்கள்.* 26ம் தேதி - விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்கள்.* 30ம் தேதி - புவியியல், வேதியியல், கணக்குப் பதிவியல், ஆட்டோ மெக்கானிக் உள்ளிட்ட பாடங்கள்.
அனைத்து பள்ளிகளிலும், மார்ச், 31ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும். தங்கள் மாவட்ட வாரியாக, தேர்வுக்கான பாடங்களை முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றியமைத்துக் கொள்ள, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...