குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணி
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த
அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், காலியாக உள்ள, 117 குழந்தை
மேம்பாட்டு திட்ட அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு, பிப்., 15ம் தேதி
நடக்கிறது. இத்தேர்விற்கு, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
சரியான முறையில் விவரங்களை
பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம்
செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின்,
'www.tnpscexams.net, www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு
உள்ளதா என்பதை, நிராகரிப்பு பட்டியலில் பார்த்து அறிந்து கொள்ளலாம். சரியான
முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தி, ஹால்
டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் பணம் செலுத்திய சீட்டின் நகலுடன்,
பெயர், விண்ணப்ப பதிவு எண், கட்டணம், செலுத்திய இடம், வங்கி, அஞ்சலக கிளை
முகவரி ஆகியவற்றை, 'contacttnpsc@gmail.com' என்ற இ - மெயில் முகவரிக்கு,
பிப்., 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...