மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி -
டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள்
இத்தேர்வில் பங்கேற்றனர்.
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்; யூனியன் பிரதேச
பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற, 'சி - டெட்'
எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வை,
பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என, ஆண்டுக்கு இருமுறை, மத்திய இடைநிலைக்
கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு அறிவிப்பு, டிசம்பரில் வெளியானது. நாடு
முழுவதும், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்த லட்சக்கணக்கானோர்
விண்ணப்பித்தனர்.
இதில், முதல் தாள், இடைநிலை ஆசிரியர்களுக்கும்; இரண்டாம் தாள், பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இரண்டு பயிற்சிகளையும் முடித்தவர்கள்,
இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதலாம்.நேற்று, நாடு முழுவதும் மற்றும்
வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட, 988 தேர்வு மையங்களில் தேர்வு
நடந்தது.சென்னையில், ஆறு; மதுரை, கோவை உட்பட, தமிழகத்தில், 10க்கும்
மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை, 9:30 முதல், 12:00 மணி வரை, முதல் தாள்; பிற்பகல், 2:00 முதல், 4:30
மணி வரை, இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும், 3,000 பேர்
தேர்வு எழுதினர்.
இத்தேர்வின் உத்தேச விடை பட்டியல், அடுத்த வாரம் வெளியாகும். இறுதி முடிவுகள், ஏப்., 1ம் தேதி வெளியிடப்படும் என, தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...