தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து
செய்ய வலியுறுத்தி மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் மாநிலத்துணை தலைவர்கள் எஸ்.பன்னீர்செல்வம்
சேவுகப்பெருமாள் மாநில சட்ட ஆலோசகர் க.ராஜா அறந்தாங்கி கல்வி
மாவட்டத்தலைவர் வி.கோவிந்தராஜன் கல்வி மாவட்ட செயலாளர் டி.தனபால்
மாவட்டத்துணைத்தலைவர்கள் எம்.நாயகம் சரவணப்பெருமாள் ஜி.பி.ராஜகோபால்
ஜே.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டதில் மாவட்ட
செயலாளர் அனைவரையும் வரவேற்றார் ஆர்பாட்டதை மாநில செயற்குழு உறுப்பினர்
டி.ஜெகதீஸ்வரன் தொடங்கிவைத்து பேசினார். ஆர்பாட்டத்தில் பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் 2004 ஆண்டு ஜூலை மாதம் முதல்
31.05.2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணிகாலமாக்கி ஆணை வெளியிட
வலியுறுத்துதல் தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஓவிய கணினி உடற்கல்வி இசை
ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்துசெய்து காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர
வலியுறுத்துதல் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு
வாரிய தர எண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட உரிய வழிவகை செய்ய
வேண்டுதல் காலிப்பணியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கலந்தாய்வை ஒழிவு
மறைவின்றி நடத்திட வேண்டுதல் இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன்
சிறப்புரையாற்றினார் திருச்சி மாவட்ட செயலாளர் கே.உதுமான் அலி திருச்சி
மாவட்ட துணைத்தலைவர் சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சி.முகேஷ்
தலைமையில் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் செயற்பட்டனர். இறுதியாக
மாவட்டப்பொருளாளர் ஆர்.செந்தில் குமார் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...