கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் குறைபாடுகளை
களைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தவும் இச்சட்டத்தை மேலும் பலப்படுத்தும்
வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி;கல்வி இன்று மிகப்பெரும்
சமூகப்பிரச்சனையாக மாறியுள்ள சூழலில் அதை
சரியான முறையில் எதிர்கொள்ளவும் அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்பதை
உறுதிப்படுத்தவும் கல்வி வணிகமயத்திற்கு எதிரான போராட்டத்தை
கூர்மைப்படுத்தவும், பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற அரசுப் பள்ளிகளை
பாதுக்காக்கவும், மேம்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
போராடி வருகிறது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தமிழகத்தில்
நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள் -2011
மாநில அரசால் இறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கல்வி
உரிமைச்சட்டம் உருப்படியாக அமுலாக்கப்பட வில்லை இச்சட்டம் பெரும்
ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தில்
பரிந்துரைக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களும் தமிழ்நாட்டில் காற்றில்
பறக்கவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மேலாண்மைக்குழுவில் உள்ளாட்சி
அமைப்புகளின் பிரதிநிதித்துவம் முழுமையாக விடுபட்டுள்ளது. இது ஏற்புடையது
அல்ல கட்டாய கல்வி உரிமைச் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு
பொறுப்புகளையும், அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு
முக்கியமான சமூக பொறுப்புகள் உண்டு. ஆனால் பள்ளி மேலாண்மைக்குழு
உருவாக்கப்படுவது குறித்தோ, அது கல்வி அதிகாரிகளின் கைகளிலிருந்து
எடுக்கப்பட்டு சமூகத்தின் பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது குறித்தோ, மேலும்
செயல்பாட்டிற்கான வழிகாட்டலை உருவாக்கிட வோ தமிழக அரசு தவறியுள்ளது. எனவே,
தனியார் பள்ளிகள் உட்பட மேலாண்மக்குழுவை அமைத்திட அரசு துரித நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு தர நிர்ணயம் உறுதிப்படுத்தப்பட
வேண்டும் விதிக்கப்பட்ட தரவரைவுகளை நிறைவேற்றாத பள்ளிகளின் அங்கீகாரம்
மறுக்கப்படும் என கல்வி உரிமைச் சட்டம் வரையறுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில்
2000 த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் இல்லாமலே
செயல்படுகின்றன. இச்சட்ட அமலாக்கத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டை
உறுதிப்படுத்தாததால் தானாகவே காலவதியாகும் சட்டமாக இச்சட்டம் உள்ளது.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்,
நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் தனியார்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த பரிந்துரையை
பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்து விட்டன. அரசு கண்துடைப்பாக பல
உத்தரவுகளை போட்டு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. ஆனால் இந்த பரிந்துரை
பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் பொய்யான பெயர் பட்டியலை
தயாரித்து 25 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கொடுக்கப்பட்ட தாக அரசு
சொல்கிறது. அதன்படி இக்கல்வியாண்டில் 89,941 மாணவர்களை சேர்த்துள்ளதாகவும்
இதனடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு 26.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால்
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில்
நிகழாண்டில் 2959 மாணவர்கள் மட்டும்தான் மாநிலம் முழுவதும்
சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தகவலும் வெளிவந்துள்ளது. அரசும்
தனியார் பள்ளி முதலாளிகளும் திட்டமிட்டு செய்துள்ள மோசடி தெரியவந்துள்ளது.
இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கல்விக்காக அரசு ஒதுக்கும் சொற்ப நிதி
ஒதுக்கீட்டையும் (அரசு-தனியார் கூட்டு) என்ற பெயரில் தனியார் கல்வி
முதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பலமட்ட
பாகுபாட்டை உருவாக்கும் பள்ளிக் கல்வியை அனுமதிக்கிற இச்சட்டம் கல்வி
வணிகமயத்தை கட்டுப்படுத்த தவறியதோடு தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு
சட்டரீதியான அங்கீகாரம் வழங்குகிறது. இது அரசியல் சாசனத்தின் பிரிவு 21 ஏ
விற்கு முரணானது ஆகவே இக்குறைபாடுகளை களைந்து சட்டத்தை பலப்படுத்துவதற்கான
முறையில் இச்சட்டம் திருத்தப்பட வேண்டும்.
0-18வயது வரை மழலையர் கல்வியை உள்ளடக்கிய முழுமையான பள்ளி கல்வி உரிமையை அரசின் செலவிலும் பொறுப்பிலும் உறுதிபடுத்திட வேண்டும்.
முழுமையான போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
சமூகத்திலும்,பொருளாதாரத்திலும்
நலிந்தவர்களுக்கு சிறுபான்மை உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் 25 சதவீதம்
மாணவர் சேர்க்கையை அரசு உறுதிபடுத்திட வேண்டும். அதற்கான கட்டணம் ஏதும்
அப்பள்ளிகளுக்கு அரசு அளிக்கக் கூடாது தனியார் பள்ளிகளுக்கான சமூக
பொறுப்பாக இதை உறுதிசெய்திட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...