தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள 200 வனவர்கள், கள உதவியாளர்கள் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக அரசின் வனத் துறை, வனக் கழகங்கள் ஆகியவற்றில் வனவர், கள உதவியாளர் பதவிகளில் 200 இடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு சென்னை, திருச்சி,
சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஆறு இடங்களில் வருகிற 22-ஆம் தேதி
நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலையில் பொது அறிவும், மதியம் பொது அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
இந்த எழுத்துத் தேர்வுக்கு 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள்
தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை www.forests.tn.nic.in,
forest.examsonline.co.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல்
பதிவிறக்கம் செய்யலாம் என்று தனது தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...