தேர்வு குறித்த மனப்பதட்டம் இரவு துாக்கத்தை
கெடுத்துவிடும். எனவே நேர்மறையான நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து
உற்சாக மனநிலையுடன் படிக்க துவங்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த
மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.
மற்றவர்களுடன் தன்னைத் தானே ஒப்பிட்டு பார்த்து
பயப்படக்கூடாது. இதுதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற
மனஉணர்வு, ஆசிரியர், பெற்றோரின் எதிர்பார்ப்பு... என கலவையான மனநிலையில்
மாணவர்கள் இருப்பர். இதுதான் தேர்வு குறித்த மனப்பதட்டத்தை
ஏற்படுத்துகிறது.
முதல் மதிப்பெண் பெறும் மாணவர் முதல் சராசரி
மாணவர் வரை இந்த மனநிலையை மாற்ற முடியாது. அதை கடந்து வரவேண்டும். நான்
நன்றாக படிப்பேனா... நான் நல்ல மதிப்பெண் பெறுவேனா... என்ற எதிர்மறை
சிந்தனையை மாற்றுங்கள்.
நான் நன்றாக தேர்வெழுதுவேன். நல்ல மதிப்பெண்
பெறுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த நேர்மறை சிந்தனை
மனப்பதட்டத்தை குறைக்க உதவும்.
ஆழ்ந்த மூச்செடுப்பது இன்னொரு சிறந்த வழி.
மூச்சை நன்றாக இழுத்து நிதானமாக வெளியேற்றும்போதும் மனப்பதட்டம் குறையும்.
கவனம் குவிந்து ஞாபகசக்தி கூடும்.
தேர்வறையில் சகமாணவர்களின் பதட்டத்தை பார்த்து
தனக்கு தானே பயம் ஏற்படும். நான் நன்றாக தேர்வெழுதுவேன் என்று மனதுக்குள்
சொல்லிக் கொள்ளுங்கள். பதட்டப்படும் மாணவர்களுக்கும் தைரியம் சொல்லுங்கள்.
பெற்றோர் உதவ வேண்டும்
அதிக மனப்பதட்டத்தில் இருந்தால் இரவு துாக்கம்
வராது. எப்போதும் தேர்வை பற்றியே சிந்தனை இருக்கும். யோசிக்காதே என்று
சொன்னால் தேர்வை மறந்து விடு என்று சொல்வதற்கு சமமாகிவிடும். இரவு துாக்கம்
அவசியம் என்பதால் பெற்றோர் தான் இதற்கு உதவ வேண்டும்.
பாடங்கள், தேர்வு தவிர, பிள்ளைகளை
சந்தோஷப்படுத்தும் விஷயங்களை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு
பிடித்தமான விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். நகைச்சுவையாக பேசலாம்.
உற்சாகமான மனநிலையில் துாங்குவதன் மூலம் நன்றாக தேர்வெழுதலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...