சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள்,
ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன. சென்னை நகரிலுள்ள
எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்,
அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள
சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற
பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
இதன்மூலம், பெற்றோர்கள், தங்களின்
பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை வாங்கி, ஆன்லைனில் பூர்த்திசெய்ய முடியும்.
மேலும், சில பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25% ஒதுக்கீட்டு
சேர்க்கை விண்ணப்பங்களுக்காக, கவுன்டர்கள், 2 நாட்களுக்கும் மேலாக
திறந்திருக்கும்.
இந்த புதிய நடைமுறையின் மூலமாக, பெற்றோர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தரப்பில் கூறுப்படுவதாவது: புதிய ஆன்லைன்
முறையால், விண்ணப்ப நடைமுறைகளுக்காக, பள்ளியில் வந்து மணிக்கணக்கில்
காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், இந்த புதிய நடைமுறை, பழைய முறையைவிட
வெளிப்படையாக இருக்கிறது மற்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை போன்ற
குறைபாடுகள் இதன்மூலம் களையப்பட முடியும். அதுமட்டுமின்றி, வெளியூர்களில்,
வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட, அட்மிஷனில்
பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
விண்ணப்ப நடைமுறைகள், ஆன்லைன் முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், பணிகள்
எளிதாகியுள்ளன. இதன்மூலம், தரவுகளை(data) எளிதாக டவுன்லோடு செய்து, அவற்றை
சரிபார்க்க முடியும்.
ஒரு குழந்தை சேர்க்கை பெற்றவுடன்,
அக்குழந்தையினுடைய அனைத்து விபரங்களையும், ஒரே கிளிக் செய்வதன் மூலமாக,
பள்ளி registry -ல் பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள முடியும். இதுதவிர,
25% இடஒதுக்கீட்டு சேர்க்கையையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த இந்த
புதிய ஆன்லைன் முறை உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...