’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன்
அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆங்கிலம்,
இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர். பிற மொழிகளை
எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை இணை
பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.
அவர்கள் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரி
பி.ஏ., மாணவர்கள் மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் ’மெடா
லிங்குஸ்டிக்ஸ்’ முறையில் உள்ள யுத்திகளை பயன்படுத்தி 3 மாதங்கள்
ஆங்கிலத்தை கற்பித்தனர். ஆய்வின் முடிவில் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம்
பேசினர்.
பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது: ஒன்றுக்கு
மேற்பட்ட மொழிகளை கற்கும் வகையில் பிறப்பிலேயே மனித மூளை வடிவமைக்கப்
பட்டுள்ளது. ஆனால் பொரும்பாலானோர் மொழிப் பாடங்களை விட அறிவியல் பாடங்களே
மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் என தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்றால்
’நியூரான்’களின் இணைப்புத் திறன் அதிகரித்து மூளையின் செயல்திறன்
செறிவூட்டப்படும். மொழிகளை கற்பதில் ’மெடா லிங்குஸ்டிக்ஸ்,’ ’நியூரோ
லிங்குஸ்டிக்ஸ்’ என 2 முறைகள் உள்ளன. இதில் ஏராளமான யுத்திகள் இருந்தாலும்
50 யுக்திகளை பயன்படுத்தி எந்த மொழியையும் 3 மாதங்களில் கற்க முடியும்.
மேலும் மாணவர்களின் மூளை வளர்ச்சிக்கு
தகுந்தாற்போல் கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு
’அறிவாற்றல் அறிவியல்’ துறை ஆசிரியர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பிறமொழி
கற்பது குறித்து அனைத்து தரப்பினருக்கும் விரைவில் பல்கலையில் பயிற்சி
அளிக்க உள்ளோம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...