மதுரை
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்
திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகள் முடிந்த பின் அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மொழி பாடம் முடிந்தவுடன் திருத்தும் பணி (கேம்ப்) துவங்கிவிடும். குறைந்தபட்சம் மூன்று மையங்கள் அமைக்கப்படும்.
கடந்தாண்டு அமைக்கப்பட்ட மையங்களில் பெரும்பாலும் விளக்கு, மின்விசிறி உட்பட அடிப்படை வசதி இல்லாததால், திருத்தும் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:இதுபோன்ற காரணத்தால் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 300 ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விளக்கம் கேட்டது. இந்தாண்டு
முதல் இதுபோன்ற பிரச்னையை தவிர்க்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...