“பதவி உயர்வில் உள்ள குறைகளை களைய அமைக்கப்பட்ட
சீராய்வு குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து போராட்டம்
நடத்தப்படும்,” என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கழக மாநில
தலைவர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில
பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.பொது செயலாளர் ராஜபாண்டியன்,
பொருளாளர் பொன்முடி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சங்கரமூர்த்தி,
செயலாளர் பாண்டித்துரை பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின் மாநிலத்தலைவர்
கூறியதாவது:
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி
உயர்வில் உள்ள குறைகளை களைய சீராய்வு குழு அமைக்கப்பட்டது. இந்தகுழு
அறிக்கை தாக்கல் செய்து 10 மாதங்களாகியும் அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து
மார்ச்சில் போராட்டம் நடத்தப்படும். பல பள்ளிகளில் இரவு காவலாளிகள்
நியமிக்கப்படாத நிலையில் 'லேப்டாப்'கள் திருடுபோனால் தலைமை ஆசிரியர்களிடம்
அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர்கள் சிலருக்கு
பணப்பலன் கிடைக்கவில்லை.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு
பொதுத்தேர்வுக்கான உழைப்பூதியத்தை அதிகப்படுத்த வேண்டும். 14 வகையான
நலத்திட்டங்களால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. நலத்திட்டத்திற்கு தனி
அலுவலர் நியமிக்க வேண்டும். தேவையில்லாமல் ஒரே மாதிரியான புள்ளி விபரங்களை
தொடர்ந்து கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தக் கூடாது. தேர்ச்சி விகிதம்
குறைந்தால் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும்,
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...